Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

சபா மாநிலம் கோத்தா கினபாலு, மங்கதால் பகுதியில் உள்ள சுங்கை ரம்பயான் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற 11 வயது சிறுவன் நீர்ச் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.05 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், முகமது ஹமிசான் அகில் அகமது என்ற அச்சிறுவன் தனது ஒன்பது நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

அப்போது, சிறுவனும் அவனது நண்பரொருவரும் குழுவிலிருந்து விலகிச் சென்றபோது, திடீரென ஆற்றின் பலமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், சிறுவனை மயக்க நிலையில் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

என்றாலும், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்ததாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் காசிம் மூடா தெரிவித்துள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு