Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

Share:

சபா மாநிலம், கோத்தா கினபாலு பகுதியில் உள்ள ஜாலான் காயா பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான பொருட்கள் விற்பனைக் கடையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 5.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனை நேற்று காலை 9.45 மணியளவில் நடைபெற்றதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் வனவிலங்கு குற்றப்பிரிவு தளபதி ஜாகி ஆஷார் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனையின் போது, கடையின் 53 வயதான உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது, காட்டுப்பன்றிகளின் 16 தந்தங்கள், 9 புலிகளின் பற்கள், 10 கரடிகளின் பற்கள், 13 பெஜோவார் கற்கள் மற்றும் 2.243 கிலோ எடையுள்ள 394 குருவிக்கூடுகள் பறிமுதல் என சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு