May 21, 2026
Thisaigal NewsYouTube
23 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஏடிவி தீயில் எரிந்தன
தற்போதைய செய்திகள்

23 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஏடிவி தீயில் எரிந்தன

Share:

புக்கிட் மெர்தாஜாம்,பிப்.8
புக்கிட் மெர்தாஜாம், கம்போங் குவார் பெராஹுவில் மோட்டார் சைக்கிள் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மோட்டார் சைக்கிள்கள் உட்பட ஒரு ATV வாகனமும் எரிந்து சாம்பலானது.

இத்தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பியதாக தெரியவந்துள்ளது.

இன்று நள்ளிரவு 3.18 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் சென்றதாக பினாங்கிலுள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை துறையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

தீயணைப்பு துறையினர் அவ்விடத்திற்கு சென்றபோது 600 சதுர அடி பரப்பளவில் மோட்டார் சைக்கிள் பட்டறையில் தீ விபத்துக்குள்ளாகி இருந்ததாகவும் 70 சதவீதம் அம்மோட்டார் சைக்கிள்கள் தீயில் பாதிக்கப்பட்டதாக இன்று ஓர் அறிக்கையில் அவர் அறிவித்தார்.

இன்று காலை 5.50 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன் தீ ஏற்பட்ட விபத்தினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News