Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சபாவில் இரண்டு அரசாங்கப் பணியாளர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சபாவில் இரண்டு அரசாங்கப் பணியாளர்கள் கைது

கோத்தாகினபாலு, நவ. 15-


சபாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் பள்ளிகளின் கழிப்பறை சீரமைப்புப்பணிகளுக்கான குத்தகைகளை பெற்று தருவதாக கூறி சில குத்தகையாளர்களிடம் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் இரண்டு அரசாங்க ஊழியர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

50 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு அரசாங்க அதிகாரிகளும் நேற்று இரவு 7 மணியளவில் சபா, எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இரண்டு அரசாங்க ஊழியர்களின்ல ஒருவர், இன்று கோத்தா கினாபாலு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் நவம்பர் 21 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்.பி.ஆர்.எம் பெற்றுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →