Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வலையில் சிக்கி அரிய வகை டால்பின் இறந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வலையில் சிக்கி அரிய வகை டால்பின் இறந்தது

அலோர் ஸ்டார், ஜூன்.21-

கெடா கடற்பகுதியில் மீனவர்களால் சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்ட கில்நெட் வலையில் சிக்கி, அழிந்து வரும் இர்ராவாடி வகை டால்பின் மீன் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. கோலா கெடா கடல்சார் அமலாக்க நிறுவனம் வழக்கமான ரோந்துப் பணியின் போது இந்த டால்பின்னின் சடலத்தைக் கண்டுபிடித்தது.

இர்ராவாடி வகை டால்பின் மீன்கள், அரிய வகை கடல்வாழ் உயிரினமாக இருப்பதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கோல கெடா வட்டார கடல்சார் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் நோர் அஸ்ரேயாந்தி இஷாக் தெரிவித்தர். இந்தச் சட்டத்திற்குப் புறம்பான கில்நெட் வலையில் மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த மீனவர்களும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →