Oct 9, 2026
Thisaigal NewsYouTube

2059இல் மலேசியாவின் மக்கள் தொகை 4.2 கோடியாக உயரும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2059இல் மலேசியாவின் மக்கள் தொகை 4.2 கோடியாக உயரும்

புத்ராஜெயா, ஜூலை.11-

மலேசியாவின் மக்கள் தொகை வரும் 2059 ஆம் ஆண்டில் 4 கோடியே 23 லட்சத்து 80 ஆயிரம் பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2060ஆம் ஆண்டு 4 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்து பின்னர் 2065 இல் 4 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரமாகவும் 2070 இல் 4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரமாகவும் வீழ்ச்சி காணும் என்று மலேசிய புள்ளி விவரத்துறை தெரிவித்தது.

கடந்த 2020 முதல் 2059 வரை மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அதன் வளர்ச்சி விகிதம் 2020 இல் 1.7 சதவீதத்திலிருந்து 2060 இல் 0.1 சதவீதமாகக் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று புள்ளி விவர தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் கூறினார்.

2060 வரையிலான 40 ஆண்டு காலக் கட்டத்தில் கிளந்தான், பகாங், பேராக், திரெங்கானு மற்றும் புத்ராஜெயாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2060 ஆம் ஆண்டில் 81 லட்சம் மக்கள் தொகையுடன் சிலாங்கூர் அதிக மக்கள் வசிக்கும் மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை