Mar 24, 2026
Thisaigal NewsYouTube
வாடகை வீட்டில் மோட்டார் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

வாடகை வீட்டில் மோட்டார் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Share:

ஜசின், ஜூலை 8-

வீட்டில் முன்பு வாடகைக்கு இருந்தவரால் கைவிட்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படும் MORTAR ரக வெடிகுண்டு ஒன்றை வீட்டு உரிமையாளர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

மலாக்கா, மெர்லிமாவில் கடந்த சனிக்கிழமை அந்த வாடகை வீட்டை சுத்தம் செய்வதற்கு முற்பட்ட அண்டை வீட்டுக்காரர், அந்த வீட்டில் வெடிகுண்டு இருப்பதை கண்டு வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதாக ஜசின் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.

அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர், கடந்த ஜனவரி மாதம் வீடுமாறியதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் யாரும் குடியமர்த்தப்படவில்லை என்று 65 வயதுடைய மாதுவான அந்த வீட்டு உரிமையாளர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்து அந்த வீட்டிற்கு விரைந்த மலாக்கா, போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் 300 மில்லிமீட்டர் நீளமும் 60 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட அந்த வெடிகுண்டை மீட்டதாக அஹ்மத் ஜமீல் குறிப்பிட்டார்.

எனினும் அந்த வெடிகுண்டு வெடிக்கும் ஆற்றலை கொண்டு இருக்கவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

வாடகைக்கு இருந்தவர், வீட்டு வாடகைத் தொடர்பில் , வீட்டு உரிமையாளரை அச்சுறுத்துவதற்காக அந்த வெடிகுண்டை பரிசாக விட்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு