புத்ராஜெயா, செப்டம்பர்.24-
நாட்டை அச்சுறுத்தி வரும் போதைப் பொருளுக்கு எதிராக, தேசிய போதைப் பொருள் தடுப்புத் தொடர்புத் திட்டம் 2025–2027 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம், நாட்டின் புதிய போதைப் பொருள் தடுப்பு உத்தியாக அமையவுள்ளதோடு, சமூக யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், போதைப் பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் பொதுமக்களிடையே ஒருங்கிணைந்த பொறுப்புணர்வை வளர்ப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளின் வகை, வயது, புவியியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்படும் என்றும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு கமிட்டியின் தலைவருமான ஸாஹிட் தெரிவித்துள்ளார்.








