காஜாங், பண்டார் தாசெக் கெசுமா, பெரானாங்கில் ஒரு வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி இருவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
30 வயதுடைய உள்ளூர் தம்பதியரான இருவரும், நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனித்தனி அறைகளில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.
மாலை 6.31 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாகவும், இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் சார்ஜன் மேஜர் அனிஃப் ஜவாவியை 016-6061 659 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நாஸ்ரோன் கேட்டுக் கொண்டார்.








