சிலாங்கூர், பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 20 வயதைக் கடந்த மகனை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலா லங்காட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அக்மால்ரிஸால் ரட்ஸி இதனைத் தெரிவித்தார். இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அந்த ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.
மேலும், சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
50 வயதைக் கடந்த அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின்கீழ் விசாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








