Nov 14, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் துணை அமைச்சர் ஸாஹிடி ஸைனுல் மறைவு - அன்வார் இரங்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் துணை அமைச்சர் ஸாஹிடி ஸைனுல் மறைவு - அன்வார் இரங்கல்

முன்னாள் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸாஹிடி ஸைனுல் அபிடின் மறைவுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை தனது 65-ஆவது வயதில் காலமான ஸாஹிடியின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

இந்தப் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையும், பொறுமையும் கிடைக்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தற்போதைய தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸிலும் ஸாஹிடியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸாஹிடியின் உடலானது பினாங்கு மாநிலத்தில் உள்ள பாயான் லெப்பாஸ் இஸ்லாமிய மயானத்தில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
399 ரிங்கிட்டில் கூச்சிங் - ஜகார்த்தா இடையே நேரடி விமானச் சேவை - ஏர்போர்னியோ அறிமுகம்

399 ரிங்கிட்டில் கூச்சிங் - ஜகார்த்தா இடையே நேரடி விமானச் சேவை - ஏர்போர்னியோ அறிமுகம்

கேஎல்சிசி அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பெட்டி - ஆடவர் கைது

கேஎல்சிசி அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பெட்டி - ஆடவர் கைது

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புத் தயார் நிலையைச் சோதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒத்திகை நடத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புத் தயார் நிலையைச் சோதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒத்திகை நடத்தியது

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி – மந்திரி பெசார் அறிவிப்பு

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி – மந்திரி பெசார் அறிவிப்பு

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்