Nov 13, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி – மந்திரி பெசார் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி – மந்திரி பெசார் அறிவிப்பு

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான 'கீத்தா சிலாங்கூர்' சிறப்பு நிதியுதவி, குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிதியுதவி மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மத்திய அரசின் ஊதியப் பட்டியலில் உள்ள சிலாங்கூர் பணியாளர்கள் மற்றும் காஃபா சமய வகுப்பு ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும்.

இதற்காக மொத்தம் 10 கோடியே 31 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிதி வரும் டிசம்பர் 21ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்கு உதவுவதில் அரசு ஊழியர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பான பணிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புத் தயார் நிலையைச் சோதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒத்திகை நடத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புத் தயார் நிலையைச் சோதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒத்திகை நடத்தியது

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்

சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 3 கோடியே 645 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 3 கோடியே 645 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

போலீஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்திய எச்கேஎல் மருத்துவர்களுக்குப் பிரதமர் அன்வார் பாராட்டு

போலீஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்திய எச்கேஎல் மருத்துவர்களுக்குப் பிரதமர் அன்வார் பாராட்டு

முஸ்லிம் அல்லாத தலைவர்கள் அதிக அடக்குமுறையாளர்கள் என்ற ஹாடியின் கருத்துக்கு சைஃபுடின் கடும் கண்டனம்

முஸ்லிம் அல்லாத தலைவர்கள் அதிக அடக்குமுறையாளர்கள் என்ற ஹாடியின் கருத்துக்கு சைஃபுடின் கடும் கண்டனம்