Nov 14, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்சிசி அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பெட்டி - ஆடவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்சிசி அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பெட்டி - ஆடவர் கைது

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் சாலையில் உள்ள கேஎல்சிசி வணிக வளாகத்தின் எதிரே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் மர்மமான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 40 வயது ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 7.17 மணியளவில் இது குறித்து போலீசாருக்குப் புகார் கிடைத்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு சூட்கேஸைச் சோதனையிட்டதில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அஹ்மாட் அஸ்வான், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையும், சம்பவம் குறித்து ஊகங்களை வெளியிடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, கேஎல்சிசி வணிக வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்ததுடன், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் நேற்று இரவு வேகமாகப் பரவின.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
399 ரிங்கிட்டில் கூச்சிங் - ஜகார்த்தா இடையே நேரடி விமானச் சேவை - ஏர்போர்னியோ அறிமுகம்

399 ரிங்கிட்டில் கூச்சிங் - ஜகார்த்தா இடையே நேரடி விமானச் சேவை - ஏர்போர்னியோ அறிமுகம்

முன்னாள் துணை அமைச்சர் ஸாஹிடி ஸைனுல் மறைவு - அன்வார் இரங்கல்

முன்னாள் துணை அமைச்சர் ஸாஹிடி ஸைனுல் மறைவு - அன்வார் இரங்கல்

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புத் தயார் நிலையைச் சோதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒத்திகை நடத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புத் தயார் நிலையைச் சோதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒத்திகை நடத்தியது

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி – மந்திரி பெசார் அறிவிப்பு

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி – மந்திரி பெசார் அறிவிப்பு

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்