Jan 22, 2026
Thisaigal NewsYouTube
காமூகனை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

காமூகனை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

தமது காலணியின் இடுக்கில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து, பெண்களின் உள்ளாடையை பதிவு செய்து வந்ததாக நம்பப்படும் காமூகன் ஒருவனை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தேதி காலை 11.47 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் பேரங்காடி மையம் ஒன்றில் நிபுணத்துவ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 35 வயது காப்புறுதி பெண் முகவர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட ஒருவர் இந்த ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த மாதுவின் பிடியிலிருந்து தப்பித்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ரிதீன் தெரிவித்துள்ளார்.

Related News