Jun 29, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன
தற்போதைய செய்திகள்

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

Share:

இன்று வெள்ளிக்கிழமை காலை, லங்காவி அருகேயுள்ள கம்போங் பாடாங் காங்பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 40 வயதுடைய ஆடவர் முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் தீக்காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது 27 பூனைகள் உயிரிழந்தன.

இச்சம்பவம் குறித்து காலை 8.47 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், சுமார் 15 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 4-வது மண்டலத் தலைவர் முகமது ஜம்ரி அப்துல் கனி தெரிவித்தார்.

வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்த போது, அவ்வீட்டின் வரவேற்பறையானது சுமார் 55% எரிந்து சேதமடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இவ்விபத்தில் முகம் மற்றும் நெஞ்சில் சுமார் 30 விழுக்காடு தீக்காயம் அடைந்த அந்த ஆடவர் சிகிச்சைக்காக சுல்தானா மலிஹா மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 வளர்ப்புப் பூனைகளில் 27 பூனைகளும் உயிரிழந்தன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு