Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

Share:

பினாங்கில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை, ஆசிரியர் பிரம்பால் அடித்ததில், அம்மாணவரின் விரல்களில் காயமும் வீக்கமும் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், செபராங் பிறை உத்தாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இது குறித்து செபராங் பிறை உத்தாரா மாவட்ட கல்வித்துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும், முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் மாநில கல்வித்துறை இயக்குநர் முகமது ஜியாவுதீன் மாட் சாட் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவரின் உறவினர்களுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சந்திப்பில் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதோடு, பள்ளி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு