Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் ஆயுதக் கொள்ளை: இளைஞர் காயம், இரு சந்தேகநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் ஆயுதக் கொள்ளை: இளைஞர் காயம், இரு சந்தேகநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

பினாங் கின்நிபோங் திபால் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நடந்த ஆயுதக் கொள்ளைச் சம்பவத்தில், 27 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.29 மணியளவில் ஜாலான் சுங்கை டவுன், தாமான் பிஸ்தாரி பகுதியில் அமைந்துள்ள ஈஸி டூ யூ மார்ட் கடையில் இச்சம்பவம் நடந்ததாக செபெராங் பிறை செலாத்தான் போலீஸ் தலைவர் நொரஸ்மி அப்ட் காப்பர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் வெட்டுக்கத்தி ஆயுதத்தால் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இளைஞரின் தலையிலும் இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தப்பிச் சென்ற இரு சந்தேகநபர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News