Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியது பெர்சாமா கட்சி - தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியது பெர்சாமா கட்சி - தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரம்

Share:

எதிர்வரும் 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதாக பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சித் தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகியோர் இன்று புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத்தகவலை உறுதிப்படுத்தினர்.

அதேவேளையில், ஜோகூர் மாநிலத்தில் பெர்சாமா போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து கட்சியின் மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று புதன்கிழமை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே, இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெர்சாமா கட்சியின் இந்த அறிவிப்பு, ஜோகூர் மாநில அரசியலில் புதிய போட்டி நிலையை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்