Jun 6, 2026
Thisaigal NewsYouTube
இறால் இறக்குமதி தடை: மலேசியாவுடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து பிரதமர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

இறால் இறக்குமதி தடை: மலேசியாவுடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து பிரதமர் உத்தரவு

Share:

தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து வகை இறால்களுக்கு மலேசியா தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக மலேசிய அரசாங்கத்துடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தாய்லாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ராட்சதா தனாதிரெக் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி தடை நீண்டகாலம் தொடருமானால், இறால் வளர்ப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கடலுணவு விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என பிரதமர் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்நாட்டு துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சரும், வேளாண்மை மற்றும் கூட்டுறவு அமைச்சரும் இணைந்து மலேசிய அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தி தாய்லாந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்கும் வகையில் தீர்வைக் காண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்