Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தலை புறக்கணிக்கமாறு அருண் துரைசாமி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

இடைத் தேர்தலை புறக்கணிக்கமாறு அருண் துரைசாமி கோரிக்கை

Share:

அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களை புறக்கணிக்குமாறு இந்திய சமுதாயத்தை ஆகம அணித் தலைவர் அருண் துரைசாமி கேட்டுக்கொண்டார்.

கிள்ளானில் பள்ளிவாசல் ஒன்றில் ஓர் இளைஞரின் மதமாற்ற சடங்கிற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமை தாங்கிய நடவடிக்கையை ஆட்சேபிக்கும் வகையில் இவ்விரண்டு இடைத் தேர்தல்களையும் இந்திய சமுதாயம் புறக்கணிக் வேண்டும் என்று அருண் துரைசாமி வலியுறுத்தினார்.

பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் பிரச்சாரத்தை தாம் தொடங்கப் போவதாக அருண்துரை சாமி குறிப்பிட்டார்.

ஓர் இளைஞரின் மதமாற்ற சடங்கிற்கு தலைமை தாங்கிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் செயல் குறித்து கேள்வி எழுப்பி, டிக்டாக் காணொலியில் பதிவிட்டது தொடர்பில் அருண் துரைசாமியை புக்கிட் அமான் போலீார் விசாரணை நடத்தி வருவது தொடர்பில் அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related News

இடைத் தேர்தலை புறக்கணிக்கமாறு அருண் துரைசாமி கோரிக்கை | Thisaigal News