பச்சரிசி விநியோகத்தில் நிலவிவரும் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு 10 கிலோ அரிசிக்கான உச்சவரம்பு விலையை 34 வெள்ளிக்கு உயர்த்தும்படி முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை அரசாங்கம் இன்று நிராகரித்தது.
செயலாக்க செலவினங்களை கட்டுப்படுத்துவது மற்றும் அரிசி விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் மொத்த வியாபார விலையிலேயே இறக்குமதி செய்யப்படும் பச்சரிசிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
தவிர, வீட்டுத் தேவைக்கான பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் உணவகங்கள் நடத்துநர்கள் தங்கள் வணிகத்திற்கு பெரியளவில் பச்சரிசி மூட்டைகளை வாங்கி குவிப்பதை குறைக்கும் அதேவேளையில் அதன் விலை சந்தையில் நிலையாக இருப்பதற்கும் அரிசிக்கான உச்சவரம்பு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று அது விளக்கம் அளித்துள்ளது.








