15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவோரில் 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இளம் வயதிலேயே விழிப்புணர்வுக் கல்வியை வழங்குவதுடன், பெற்றோர்களும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றார்.
கிளந்தான், மாச்சாங்கில் இன்று நடைபெற்ற மடானி சார்ந்த கிராமம் மற்றும் பள்ளித் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு கல்வி மற்றும் தடுப்பு, அமலாக்கம், மறுவாழ்வு ஆகிய மூன்று முக்கியப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.








