அடுத்த பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மக்களுக்குத் தம்மால் இயன்ற சிறந்த சேவைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பதாகவும், இறுதி முடிவை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.
சிலாங்கூர், கோத்தா டாமான்சாராவில் இன்று நடைபெற்ற மடானி கீத்தா நிகழ்ச்சிக்குப் பின்னர், பொதுமக்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் இதனைத் தெரிவித்தார். வடிகால் பிரச்சினைகள் உள்ளிட்ட நீண்டகாலப் புகார்கள் இன்னும் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், அவற்றுக்கு விரைவில் தீர்வு காணத் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் கூறினார்.








