மக்கள் வசிக்கும் பகுதிகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், துறைமுகங்கள், ரயில் பாதைகள், முக்கிய நெடுஞ்சாலைகளையும் உள்ளடக்கும் வகையில் 5ஜி சேவை அளவீட்டு முறையை மலேசியா மறுஆய்வு செய்யக்கூடும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
பினாங்கு துறைமுகத்தில் நாட்டின் முதல் பிரத்யேக அலைக்கற்றையுடன் கூடிய தனியார் 5ஜி வலையமைப்பைத் தொடக்கி வைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். இந்தத் தொழில்நுட்பம் கனரக இயந்திரங்களைத் தொலைவிலிருந்து இயக்கவும், தானியங்கி பாதுகாப்புக் கண்காணிப்பை மேம்படுத்தவும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் உதவும்.
இந்தத் தொழில்நுட்பத்தை கிள்ளான் துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் பிற துறைமுகங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் ஃபாஹ்மி கூறினார்.








