Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரேபிட் கேஎல் மற்றும் ரேபிட் பினாங் சேவைகளுக்காக 250 மின்சாரப் பேருந்துகளை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இதில் 175 பேருந்துகள் ரேபிட் கேஎல் சேவைக்கும், 75 பேருந்துகள் ரேபிட் பினாங் சேவைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 52 பேருந்துகள் கிடைத்துள்ள நிலையில், எஞ்சிய பேருந்துகள் உட்பட அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஜார்ஜ்டனில் உள்ள ரேபிட் பினாங் பேருந்துப் பணிமனையில் மின்சாரப் பேருந்து சேவையைத் தொடக்கிவைத்தபோது அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

மின்சாரப் பேருந்துகள் டீசல் பேருந்துகளைவிட அமைதியாக இயங்குவதால், பாதசாரிகள் அவற்றின் வருகையை உணராமல் போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே, பொதுப் பேருந்துகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகக் கூறப்படும் வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த லோக், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாட்டினர் பேருந்துகளில் பயணிப்பதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய முடியாது என்றும், புகார்கள் குறித்து ரேபிட் கேஎல் உதவி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்

பிறரை இழிவுபடுத்தும் தளமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை

பிறரை இழிவுபடுத்தும் தளமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை