Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இந்து ஆலயங்களுக்கு 9.24 மில்லியன் ரிங்கிட்  நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

இந்து ஆலயங்களுக்கு 9.24 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

Share:

இந்தியர் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா, 'தர்மா மடானி' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 462 இந்து ஆலயங்களுக்கு இதுவரை 9.24 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை வழங்கியுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று பிரிக்பீல்ட்ஸ், கலா மண்டபத்தில் நடைபெற்ற தர்மா மடானி நிகழ்ச்சியில், டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இரண்டாம் கட்டமாக 300 ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்கினார். இதன் மூலம் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 462 ஆலயங்கள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 1,000 ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் வீதம் 20 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இந்த நிதி ஆலயப் பராமரிப்புக்காக மட்டுமல்லாமல், மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், தலைமைத்துவப் பயிற்சிகள் மற்றும் கலாச்சார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.

"ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல், சமூக மாற்றத்திற்கான மையங்களாகத் திகழ வேண்டும்" என டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, நிதி பெற்ற ஆலயங்களின் பட்டியல் மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது பதிவேற்றப்படும் என்பதையும் விளக்கினார்.

நிதி உதவி பெற்ற ஆலயங்களில் காப்பார், அத்லோன் தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இந்த நிதியானது, ஆலயங்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு மேலும் ஊன்றுக்கோலாக இருக்கும் என்று அந்த ஆலயத்தின் செயலாளர் சீமான் பெருமாள் தெரிவித்தார்.

ஆலயங்களில் செயல்பாடு சிறப்பாக அமைந்தால், இது போன்ற நிதியை ஆலய நிர்வாகங்கள் தொடர்ந்து பெற முடியும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் வாக்குறுதி அளித்து இருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று கெடா, கூலிம், ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான பொறுப்பாளர் ராஜ்குமார் ராமநாதன் தெரிவித்தார்.

ஆலயங்கள் தங்களின் நிர்வாகத் திறனை நிரூபிப்பதன் மூலம், எதிர்காலத்திலும் இத்தகைய தொடர் நிதி ஆதரவைப் பெற்று இந்தியச் சமூகத்தின் கல்வி, ஆன்மீகம் மற்றும் சமூக நலனில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் ஆலயங்களின் இதர தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை