Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கோபிந்த் சிங், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டியதில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோபிந்த் சிங், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டியதில்லை

சிலாங்கூர் மாநில DAP தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக தாம் வகித்து வரும் அமைச்சர் பதவிலிருந்து கோபிந்த் சிங் டியோ, பதவி விலக வேண்டியதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

15 பேர் கொண்ட சிலாங்கூர் மாநில பொறுப்பாளர்களுக்கான DAP தேர்தலில் கோபிந்த் சிங், தோல்விக்கண்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்ற போதிலும் தேர்தல் முடிவை அவர் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு இருப்பதையும் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முடிவு, DAP கடைப்பிடித்து வரும் ஜனநாயக நடைமுறைகளில் ஒன்றாகும். எனவே தாம் வகித்து வரும் இலக்கவியல் துறை அமைச்சர் பதவியிலிருந்து கோபிந்த் சிங், விலக வேண்டிய அவசியமில்லை என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

DAP-யின் துணைத் தலைவர் என்ற முறையில் கோபிந்த் சிங், தேசிய அளவில் மேலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →