Dec 5, 2025
Thisaigal NewsYouTube
புதிய நீதிபதிகள் நியமனம்: சீர்திருத்தங்கள் தொடர வேண்டும் என பெர்சே வலியுறுத்தல்!
தற்போதைய செய்திகள்

புதிய நீதிபதிகள் நியமனம்: சீர்திருத்தங்கள் தொடர வேண்டும் என பெர்சே வலியுறுத்தல்!

Share:

ஷா ஆலாம், ஜூலை.19-

மலேசியாவின் மூன்று புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட போதிலும், நீதித்துறை சீர்திருத்தங்களை நிறுத்திவிடக் கூடாது என பெர்சே அமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே முன்பு அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவரது நேர்மையான முடிவுகள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என பெர்சே சுட்டிக் காட்டியுள்ளது.
பிரதமரின் நீதிபதிகள் நியமன அதிகாரத்தைக் குறைப்பது உட்பட, நீதித்துறை நியமன ஆணையத்தை வலுப்படுத்தவும், அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் பெர்சே கோரிக்கை விடுத்துள்ளது. 1988 ஆம் ஆண்டின் நீதித்துறை நெருக்கடியை நினைவில் கொண்டு, நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது என பெர்சே தெரிவித்துள்ளது.

Related News