கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை தளமாக கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளூர் சேவையை தொடங்கிய மலேசியாவின் புதிய விமான நிறுவனமான மைஏர்லைன், திடீரென்று தனது சேவையை இன்று வியாழக்கிழமை காலையில் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. இதனால், அந்த விமான நிறுவனத்தில் டிக்கெட்டி வாங்கிய பயணிகள் விமானத்திற்காக காத்திருந்து பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானதுடன் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சரவா மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரால் தொடங்கப்பட்ட மைஏர்லைன்திடீரென்று நிதி நெருக்கடிக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்குமனால் அது எத்தகைய பிரச்னையை எதிர்நோக்கியுள்ளது என்பதை MAVCOM ( மாவ்கோம் ) எனப்படும் மலேசிய விமான போக்குவரத்து ஆணையத்திடம் தெரியப்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவுறுத்தியுள்ளார்.








