Nov 5, 2026
Thisaigal NewsYouTube

தமிழ்மொழிப் பாடவேளைகள் குறைக்கப்படாது – கல்வி அமைச்சு உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமிழ்மொழிப் பாடவேளைகள் குறைக்கப்படாது – கல்வி அமைச்சு உறுதி

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடத்திற்கான வாராந்திர 12 பாடவேளைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், தேசியப் பள்ளிகளில் மலாய் மொழிக்கும், சீனப்பள்ளிகளில் சீன மொழிக்கும், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழிக்கும் வாரத்திற்கு 12 பாடவேளைகள் ஒதுக்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.

பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளுக்குப் பின்னர் இம்முடிவு இறுதி செய்யப்பட்டதாகவும், அனைத்து வகைப் பள்ளி மாணவர்களின் மொழித்திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமைச்சு கூறியது.

இதற்கிடையே, தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடவேளைகளை 12-லிருந்து 10-ஆகக் குறைக்கும் முன்மொழிவுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகக் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிற்கு கடந்த நவம்பர் 4ஆம் தேதி கடிதம் அனுப்பியதுடன், அதன் நகலைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் அனுப்பியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →