நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் மூன்று வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
17 வயதுடைய அந்த மாணவர், வேப்பிங் செய்த பின்னர் மயக்க நிலையில் காணப்படுவதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
கெத்தாமின், பென்ஸோடியஸெபின்ஸ் மற்றும் டிஎச்சி ஆகிய மூன்று வகையான போதைப்பொருட்களுக்கான அறிகுறிகள் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி பள்ளியில் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்தக் காணொளி, நவம்பர் 4ஆம் தேதி திரேட்ஸ் தளத்தில் பரவியதைத் தொடர்ந்து மாணவர் அடையாளம் காணப்பட்டார்.








