எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் கையெழுத்திடப்பட்ட நம்பிக்கை மற்றும் வழங்கல் ஒப்பந்தமான சிஎஸ்எ உள்ளடக்கங்களைப் பொதுமக்களுக்கு வெளியிட அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதில் தமக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், ஏற்கெனவே முந்தைய அரசாங்கங்கள் எதிர்க்கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்தத்தை நிர்வகிக்கும் துணைப் பிரதமர் ஃபாடில்லா யுசோஃப்புடன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவு, நிறுவனச் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.








