பினாங்கில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாற்றப்படாத நில வரி விகிதங்கள் தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் சுமையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்குப் பதிலளித்த அவர், பெரும்பாலான நில உரிமையாளர்களுக்கு 50 விழுக்காடு வரிச்சலுகை, பள்ளிகள் மற்றும் சில இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு 50 ரிங்கிட் குறைந்தபட்சக் கட்டணம், தவணை முறையில் வரி செலுத்தும் வசதி ஆகியவை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மக்களின் கருத்துகளைக் கருத்தில் கொண்டு நில வரி மீதான சலுகைகள் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சாதாரண மக்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்க வரி உயர்வை முடக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும், ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் வலியுறுத்தியிருந்தார்.








