இனவாத அரசியல் மற்றும் மத ஒடுக்குமுறையை அமெரிக்க மக்கள் நிராகரித்து வருவது, பன்முகத்தன்மையை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு சிறந்த பாடமாக அமைய வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட் உறுப்பினராக அப்துல் எல்-சயீத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இன மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் அரசியல் மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இனவாத சிந்தனை மேலோங்கினால் முஸ்லிம்களும் சிறுபான்மை சமூகத்தினருமே அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
மலாக்கா, கிளேபாங் சட்டமன்றத் தொகுதியின் தாமான் புக்கிட் ரம்பாயில் நடைபெற்ற மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளையில், அமெரிக்காவின் அரசியல் முறையை மலேசியா பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், பல்லின மக்கள் வாழும் மலேசியாவுக்கென தனித்துவமான அடையாளம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.








