நெகிரி செம்பிலானில், 60 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 முதல் 34 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
டிக்டாக் சமூக ஊடகத்தில் முதியவர் சிலரால் துன்புறுத்தப்படும் காணொளி பரவியதைத் தொடர்ந்து போலீஸ் துறை விசாரணையைத் தொடங்கியது.
இதையடுத்து, முதியவருடன் உறவுமுறை கொண்ட மூவரும் கைது செய்யப்பட்டதாகவும், இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ரப்பர் குழாய், சக்கர நாற்காலி, கைப்பேசி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.








