Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கெடா பூங்காவில் பழைய மோர்டார் குண்டு கண்டறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெடா பூங்காவில் பழைய மோர்டார் குண்டு கண்டறியப்பட்டது

Share:

கெடா, பாடாங் தெராப் பகுதியில் உள்ள தாமான் ரெக்ரியாசி மஹாவாங்சாவில் பணியாற்றிக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று பழைய மோர்டார் குண்டைக் கண்டெடுத்துள்ளார்.

30 வயதான அந்தத் தொழிலாளி, காலை 11 மணியளவில் குண்டு கண்டெடுக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்ததாக பாடாங் தெராப் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஜுனோ தெரிவித்துள்ளார்.

செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்தக் குண்டு மண்ணில் இருந்து வெளிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த கெடா மாநில போலீசாரின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு, அது துருப்பிடித்த நிலையில் இருந்த 60 மில்லிமீட்டர் வெடிக்காத மோர்டார் குண்டு என அடையாளம் கண்டதாக அனுவார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த மோர்டார் குண்டு அருகிலுள்ள கல் குவாரியில் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News