May 22, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் மூவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் மூவர் உயிர் தப்பினர்

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி 27 -

லோர் ஸ்டார், தன்ஜுங் பென்டாஹாரா வில் இன்று மதியம் நான்கு வீடுகளில் தீப்பற்றிக்கொண்டதில் இரண்டு முதியவர்கள் உட்பட மூவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.

மதியம் 12.01 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நான்கு வீடுகள் 80 முதல் 95 விழுக்காடு வரையில் சேதமுற்றன. இதில் 77 வயது முதியவர், 75 வயது மூதாட்டி மற்றும் 44 வயது வீட்டுப்பணியாளர் ஒருவர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக தீயணைப்புப்டை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயமுற்றவர்கள் அனைவரும் இ.ம்.ர்.ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ மற்ற வீடுகளில் பரவாமல் இருக்க 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்

Related News