Oct 25, 2026
Thisaigal NewsYouTube

பாயா தெருபோங் நிலச்சரிவில் மருத்துவர் மரணம்: முன்கூட்டியே எச்சரித்ததாக அமைப்பு தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாயா தெருபோங் நிலச்சரிவில் மருத்துவர் மரணம்: முன்கூட்டியே எச்சரித்ததாக அமைப்பு தகவல்

பினாங்கு மாநிலம் பாயா தெருபோங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 73 வயதுடைய மருத்துவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மலைச்சரிவு அபாயங்கள் குறித்து பலமுறை எச்சரித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எஸ்ஏஎம் (SAM) என்றழைக்கப்படும் சஹாபாட் ஆலாம் மலேசியா என்ற அமைப்பு மாநில அரசைக் குறை கூறியுள்ளது.

இது குறித்து எஸ்ஏஎம் அமைப்பின் தலைவர் மீனாட்சி ராமன் கூறுகையில், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான மலை வெட்டுப் பணிகள் மற்றும் அதனால் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாயா தெருபோங் பகுதி ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடமாக அறியப்பட்டுள்ளதாகவும், அத்தகைய சூழலில் மலைச்சரிவுகளில் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறிப்பாக ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்துவதாக மீனாட்சி ராமன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →