நாட்டில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை உயர்க்கல்விக்கழக மாணவர்கள் தொடர்பில் 251 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
கல்விக் கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்குவாட் வாஜா திட்டத்தில், செப்டம்பர் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 3 லட்சத்து 40 ஆயிரத்து 667 தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 461 பேர் பெண்கள்; 76 ஆயிரத்து 206 பேர் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.








