பேராக், தஞ்சோங் ரம்புத்தான் அருகே உள்ள ஓராங் அஸ்லி கிராமத்தில் ஆற்றில் மூழ்கி 42 மற்றும் 50 வயதுடைய இரு நபர்கள் உயிரிழந்தனர்.
இன்று பிற்பகல் 2.55 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தம்பின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அடர்ந்த காட்டுப் பாதையில் சுமார் 600 மீட்டர் நடந்து ஆற்றை அடைந்த மீட்புப் படையினர், இருவரையும் சுயநினைவின்றிக் கண்டெடுத்தனர்.
மருத்துவக் குழுவினர் இருவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். பின்னர் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மீட்புப் பணி மாலை 5.05 மணிக்கு நிறைவடைந்தது.








