ஜோகூர், பாசீர் கூடாங் பகுதியில் ரத்தினக் கற்களைத் தேடிக் கொண்டிருந்த 48 வயது ஆடவர், சுமார் ஒரு மீட்டர் ஆழ மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.
ஜாலான் கேடிடி 26 பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகே, தனது நண்பருடன் ஜமாலுடின் வஹாப் ரத்தினக் கற்களைத் தேடியபோது திடீரென மண் சரிந்து அவரைப் புதைத்தது. அவரது நண்பர் காயமின்றித் தப்பி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
காலை 10 மணிக்குக் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, பாசீர் கூடாங் மற்றும் ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 17 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கனமழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டு, நண்பகல் 12.33 மணிக்கு அவர் மீட்கப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்ததை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.








