நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணத்தில் மதச் சடங்குகளை நடத்துவதும், திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்வதும் இருவேறு நடைமுறைகள் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தேசியப் பதிவு துறை அலுவலகத்தில் இந்து தம்பதியரின் திருமணப் பதிவுக்கு அவர் தலைமையேற்றதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பழைய காணொளி தொடர்பில் அவர் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது மத குருக்கள் மூலம் திருமணச் சடங்குகளை நடத்திக் கொள்ளும் நிலையில், முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணப் பதிவை தேசியப் பதிவு துறை மேற்கொள்கிறது. சட்ட நடைமுறைகளைப் பொதுமக்கள் புரிந்து கொண்டு, இன, மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








