Oct 25, 2026
Thisaigal NewsYouTube

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர்.ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர்.ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்

மக்கள் ஓசை நாளிதழில் கடந்த 15 ஆண்டுகளாக மூத்த ஆசிரியராகப் பணியாற்றி வந்த பி.ஆர்.ராஜன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

உயர் ரத்த அழுத்தம், தலையில் ரத்தக்கட்டி தொடர்பான சிக்கல்களால் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

68 வயதான பி.ஆர். ராஜன், 45 ஆண்டுகளாக உள்ளூர் ஊடகத் துறையில் பணியாற்றி வந்ததுடன், 15 ஆண்டுகளாக மக்கள் ஓசை நாளிதழில் சேவையாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி கழிப்பறையில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் சந்தித்து, அவருக்கு தபோங் காசே@ஹவானா எக்ஸ் டிஎம் மூலம் உதவித் தொகையை வழங்கினார்.

மறைந்த பி.ஆர். ராஜனுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →