பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை திங்கிட்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் எச்சரிக்கை காலம் முழுவதும் தொடர் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கெடா மாநிலத்தில் லங்காவி, கூபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொகோக் சேனா, பெண்டாங், யான், கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பஹாரு ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பேராக் மாநிலத்தில் கெரியான், செலாமா, லாருட் மாத்தாங், மஞ்சோங், பேரா தெங்கா, பாகான் டத்தோ மற்றும் ஹிலீர் பேரா ஆகிய பகுதிகள் எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.
மேலும், பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








