பினாங்கு, தஞ்சோங் பூங்கா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நீச்சல் குளத்தில் நீர் சிகிச்சை மேற்கொண்டிருந்த 57 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று மாலை 5.20 மணியளவில் தனது கணவருடன் அவர் நீர் சிகிச்சையில் ஈடுபட்டிருந்த போது, கணவர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கச் சென்ற நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸாக் முஹமட் தெரிவித்துள்ளார்.
திரும்பி வந்த கணவர், மனைவி நீருக்கடியில் இருப்பதைக் கண்டு அவரை மீட்டு சிபிஆர் முதலுதவி அளித்துள்ளார்.
இருப்பினும், சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் மாலை 5.49 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.








