Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பற்றுச்சீட்டுகள் விநியோகம்
தற்போதைய செய்திகள்

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பற்றுச்சீட்டுகள் விநியோகம்

Share:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்ப பாரங்களை கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கெஅடிலான் கட்சியின் புக்கிட் மெலாவத்தி தொகுதித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வசதி குறைந்தவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பெருநாள் காலப் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கி வருகிறது என்று தீபன் குறிப்பிட்டுள்ளார்.

Related News