கோலாலம்பூர், டிசம்பர்.20-
நாட்டின் பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் மாநிலங்களின் சில மாவட்டங்களில் நள்ளிரவுக்கு மேல் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையான JPS எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சற்று விழிப்பாக இருக்கும்படி அது கேட்டுக் கொண்டுள்ளது.








