Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நாட்டின் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காமல் பெற்ற வெற்றி
தற்போதைய செய்திகள்

நாட்டின் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காமல் பெற்ற வெற்றி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.02-

மலேசியாவின் இறக்குமதி பொருட்களுக்கான 25 விழுக்காடு வரியை 19 விழுக்காடாக அமெரிக்கா குறைத்திருப்பது, மலேசியா மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு கிடைக்கப் பெற்ற மாபெரும் வெற்றியாகும் என்று முதலீடு, வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் தன்னாட்சி உரிமையை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காமல் முழுக்க – முழுக்க பேச்சு வார்த்தைகளின் வழி மலேசியாவிற்கு இந்த வெற்றி கிட்டியுள்ளது என்று ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் குறிப்பிட்டார்.

நாட்டின் சமூகவியல் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கைகளை அமல்படுத்துவதில் எந்த நிலையிலும் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காமல் மலேசியா போராடியதாக அமைச்சர் தெரிவித்தார்.

தென்கிழக்காசிய நாடுகளுக்கான குறைவான வரி விகிதத்தின் அடிப்படையில் நமக்கும் இந்த வெற்றி வாய்ப்பு கிடைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News