May 26, 2026
Thisaigal NewsYouTube
MIFA வும் MIEDயும் இணைந்து நடத்திய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான மிகப்பெரிய கால்பந்து போட்டி
தற்போதைய செய்திகள்

MIFA வும் MIEDயும் இணைந்து நடத்திய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான மிகப்பெரிய கால்பந்து போட்டி

Share:

டிச. 15-

MIFA எனப்ப்டும் மலேசிய இந்திய கால்பந்து சங்கமும் மாஜூ கல்வி மேம்பாட்டு நிறுவனமான MIEDயும் இணைந்து நடத்திய 12 வயதுக்குட்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாவது MIFA Beyond கால்பந்து போட்டி கடந்த டிசம்பர் 7ஆம் 8 ஆம் தேதிகளில் பினாங்கில் உள்ள USM Kopa Arena அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தத் தொடரில் நாடு முழுவதிலுமான தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1200 மாணவர்கள் பங்கேற்றனர். 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டி மலேசியாவின் மிகப்பெரிய கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம. இ. கா.வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு சரவணன் இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மேலும், MIFA-வுக்கு ஒரு இலட்ச ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினார்.

MIFA வின் தலைவர் திரு. கே.வி. அன்பனந்தன் இபோட்டி குறித்து தெரிவிக்கயில், MIED-ன் ஆதரவு இல்லாமல் இப்போட்டி சாத்தியமாகி இருக்காது என்று கூறி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதே சமயம், MIEDயின் தலைவர் என்ற முறையில் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆதரவு இப்போட்டிக்கு மேலும் உத்வேகத்தை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் முதல்முறையாக 6 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தமிழ் பள்ளி மாணவர்களின் கால்பந்து திறமையை தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிந்து வளர்க்கும் நோக்கம் கொண்டது என MIEDஇன் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் ANDREW DAVID செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்போட்டியில் பினாங்கு Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN RAYER, SENATOR லிங்கேஸ்வரன், பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன், பினாங்கு, Berjaya Hotel மேலாளர் Amran Taib, மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பாண்டியன், பினாங்கு மாநில குற்றவியல் தடுப்பு, சமூகப் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் SAC Puspanathan, காவல் துறை அதிகாரி ACP Popathy ஆகியோரும் உடன கலந்து கொண்டு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

இப்போட்டியின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்த MIFA அதிகாரிகள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , 80 குழுக்களாகப் பங்கேற்ற மாணவர்கள் ஆகியோருக்கு ANDREW தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு