Nov 13, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் அரசு பணியாளர்களுக்கு இரண்டு மாத போனஸ்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் அரசு பணியாளர்களுக்கு இரண்டு மாத போனஸ்

Share:

இஸ்கண்டார் புத்ரி, நவம்பர்.13-

ஜோகூர் மாநில அரசு ஊழியர்கள் அடுத்த மாதம், போனஸ் தொகையாக இரண்டு மாத சம்பளத்தை பெறுவர் என்று மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி இன்று அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத்திற்கும் மக்களுக்கும் தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் பொதுச் சேவை ஊழியர்கள் கொண்டிருந்த கடப்பாட்டின் காரணமாக மாநிலத்தில் உள்ள 17 ஆயிரத்து 454 ஊழியர்கள் இரண்டு மாத சம்பளத்தைப் போனஸ் தொகையாகப் பெறுவர் என்று அவர் அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் உள்ள கூட்டரசு பொதுச் சேவை ஊழியர்களும் இந்த சிறப்பு நிதி உதவியைப் பெறுவர் என்று கோத்தா இஸ்கண்டாரில் 2026 ஆம் ஆண்டுக்கான ஜோகூர் மாநில 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றுகையில் டத்தோ ஓன் ஹஃபிஸ் இதனைத் தெரிவித்தார்.

Related News